ஜேசன் (இயற்பெயர்: ஈ.யேசுதாசன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜுன் 2015. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி கிராப்பிக்ஸ்).
xxviii, 84 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 21×14 சமீ.
இந்நூலில் ஆசிரியர் எழுதிய வெலிங்டன் சினிமா ஓரம், முதல் கவிதை வரிகள், நட்பு வனத்து ரோயா-ராஜா, சொல்லாமல் மரித்த காதல், பட்டுக்குப் பட்டு, நெய்தலில் ஓர் மாலை, ஒரு பார்வை ஆகிய கட்டுரைகளும், தேசம், குடும்பம், காதல், பன்னாட்டுப் பார்வை, பொது ஆகிய பிரிவுகளின்கீழ் வகுத்துத் தொகுக்கப்பெற்ற 32 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. ஈ.யேசுதாசன் (ஜேசன்) வட இலங்கையின் பலாலி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வசாவிளான் மகாவித்தியாலயத்தில் கல்வி பெற்று பின்னர் 1974 முதல்; ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில், கலை, முதுகலை பட்டங்களை முடித்து, ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய, ஆபிரிக்க, பிராந்திய பணி திட்ட ஒருங்கிணைப்பாளராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடமையாற்றி பணி ஓய்வு பெற்றவர். 1980களில் தொடங்கி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் தமிழ் ஈழ அரசியல், அகதிகள் புனர்வாழ்வு, மனித உரிமை, இலக்கியம் சார்ந்த அமைப்புகளிலும் இன்றுவரை பணியாற்றிவரும் தமிழ்மொழி ஆர்வலரும் சமூக சிந்தனையாளரும் செயற்பாட்டாளருமாவார். இவர் Poetic Affusion என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பொன்றினை 2013இல் வெளியிட்டுள்ளார்.