வில்வரசன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-82-6.
இது வில்வரசனின் முதலாவது கவிதைத் தொகுப்பு. இதில் 37 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘போரின் கலப்பை உழுது, மறுத்துழவு செய்த நிலத்துக்குச் சொந்தக்காரன் வில்வரசன். அது ‘செம்’புலப் ‘பெயல்’ நீராலும் கண்ணீராலும் வளம் அனைத்தும் தொலைத்த மண். இன்று வியர்வையால் முன்னை இழந்த பெருமையை மீளப்பெறத் துடிப்பதொரு மண். இந்த மண்ணின் சாட்சியாகத் தன் தமிழைத் தருகிறார் இக்கவிஞர். இன்று இவர் நிற்பது, நடப்பது எல்லாம் பேராதனை எனும் குறிஞ்சியிலேதான். வளமார் குறிஞ்சியில் வாழ்வுறினும் கவிஞனைத் தொடுகிறது போர்ப் பாலையான பசியுறுநிலம்’ (பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன், அணிந்துரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 263ஆவது நூலாக வெளிவந்துள்ளது.