முருகு தயாநிதி. கொழும்பு 6: திருமதி தயாநிதி சாரதாதேவி, சோஜயஹரி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: ஹரி அச்சகம், வெள்ளவத்தை).
x, 78 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
படுவான்கரைக்குக்கு போனேனம்மா, படுவான்கரைப் பெண்கள், படுவான்கரைக்குக்கு ஒருதரம் வந்துபார் தம்பி எனப் படுவான்கரை மண்ணின் செழிப்பு கவிஞரின் கைகளில் மேலும் சிறப்புப் பெறுகின்றது. விளையாட்டு என்ற கவிதையில் சிறுவர் சிறுமியரின் சிறு வயது விளையாட்டுகளில் மனம் லயிக்கிறார். அப்பா எப்ப வருவாரம்மா என்ற கவிதை பெற்றோரைப் பிரிந்த ஒரு குழந்தையின் ஏக்கத்தை பிரதிபலிக்கின்றது. இத்தொகுப்பில் கலாநிதி முருகு தயாநிதியின் 49 பலவினக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கேட்கிறதா?, கேளடி கிளியே, ஓரணி, ஆசைக்கிளி, ஒற்றையடிப் பாதை மனிதன், மட்டைப்பந்து விளையாட்டு, தன்மானம், சரித்திரம் படைப்போம், நீண்ட பயணம், என் மண்ணே, இலக்குப் பார், என இன்னோரன்ன தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. கலாநிதி முருகு தயாநிதி தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை அம்பிலாந்துறைக் கலைமகள் மகாவித்தியாலயத்தில் பயின்று உயர் தரக் கல்வியினைக் குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் நிறைவு செய்தவர். பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு, BA, MAP, MA, MPhil பட்டங்களையும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆநுன பட்டத்தினையும், திறந்த பல்கலைக்கழத்தில் கல்வி டிப்ளோமாவையும் (PGDE) தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் பயிற்சியையும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் (Ph.D) பட்டத்தினையும் நிறைவு செய்துள்ளார். 1998ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று 11 வருட சேவைக்குப் பின்னர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்கள் பணியாற்றினார். அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு தொடக்கம், தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.
 
				