புஸ்பநாதன் நிசாந்த். யாழ்ப்பாணம்: புஸ்பநாதன் நிசாந்த், கேணியடி ஒழுங்கை, மீசாலை தெற்கு, மீசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (கொழும்பு 13: A.T.Publishers, 195, Wolfendhal Street).
xv, 105 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.
இத்தொகுதியில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை காதல் கவிதைகள். கல்விச் செயற்பாடுகளுக்கிடையே இவ்விளங் கவிஞன் தனது கன்னிப் படைப்பை வெளிக்கொணர்ந்துள்ளார். தனது ஆரம்பக் கல்வியை யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், மேல்மாகாணத்தில் தெகிவளை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தற்போது கொழும்பு இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை வர்த்தகப் பிரிவில் கற்று வருகின்றார். இந்நூலுக்கான முன்னுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர், கலாநிதி செ.யோகராசா அவர்கள் ஒரு ஆலோசனைக் குறிப்பாக வழங்கியுள்ளார்.