சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை, Manaosai Verlag, Schweickerweg 29, 74523 Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (ஜேர்மனி: Stuttgart).
114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
1975இல் தன் முதற் கவிதையை எழுதி அதனை 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகக் கண்ட சந்திரவதனா தொடர்ந்தும் அவ்வப்போது கவிதைகளையும், சிறுகதைகளையும், பல்வேறு ஆக்க இலக்கியங்களையும் எழுதிவந்துள்ளார். இக்கவிஞரின் உணர்வுகளின் வடிகால்களாக அவ்வப்போது எழுதி ஐ.பீ.சீ. தமிழ் வானொலி, எரிமலை சஞ்சிகை, களத்தில், ஈழமுரசு (பாரிஸ்), ஈழநாடு (பாரிஸ்), பெண்கள் சந்திப்பு மலர் ஆகியவற்றிலும், இணைய இதழ்களான சூரியன், வார்ப்பு, பதிவுகள், யாழ் இணையம், வளரி ஆகியவற்றிலும் பிரசுரிக்கப்பட்ட கவிதைகளில் 71 கவிதைகளையும், ‘பெண் மொழிக் கவிதைகள்’ என்ற ஆய்வுச் சுருக்கத்தையும் இணைத்து இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.