பிரம்மியா சண்முகராஜா. யாழ்ப்பாணம்: பிரம்மியா சண்முகராஜா, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி).
(16), 90 பக்கம், விலை: ரூபா 720., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-9918-16-0.
பிரமி என்ற கன்னிக் கவிதைத் தொகுதியுடன் ஈழத்தின் படைப்பிலக்கியத்துறையில் சிறகடிக்கமுனையும் பிரம்மியா சண்முகராஜா, பத்திரிகைகளிலும், மகநூல்வழியாகவும் தனத கவிதைகளை பிரசுரித்து கணிசமான வாசகர்களைத் திரட்டி வைத்திரப்பவர். அவற்றின் தேர்ந்த தொகுப்பாக வெளிவரும் இத்தொகுதியில் அவரது 53 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதை, உன்னைத்தேடு, சகுனக்குறிகள், மனமிருக்கு இடமில்லை, கடற்காற்றின் ஸ்பரிசம், வாடை குடித்த தென்றல், திருமலை மேற்கு என்னூர் இப்பொ, பாவக்காய் சுண்டல், என் தாயின் இரண்டாம் வார்ப்பு, தலையணையும் போர்வையும், மூளைக்கும் காய்ச்சல் வரும், புகையிலைப் பிரியர், பிறை நிலா முழமை, வலிகளையும் ரசித்துவிடு, கறுத்தமாரி, தேடல்கள், கன்னிப்பூ பூத்திடுச்சி, காக்கை மருத்துவம், முகமூடிகள், அன்பகத்து உயிர்நிலை, ஜென்ம நிறைவில், நல்லது நினை இன்னொரன்ன 53 கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன.