சுப்பிரமணியம் ஜெயசீலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-11-9.
காதலின் உணர்வுகளால் பிரசவிக்கப்பட்ட இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் ஜெயசீலன் காதலின் கற்பனையையும், காதல் தோல்வியின் நிஜமுகத்தையும் சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். ‘முகநகை கொய்தாள்’ என்ற கவிதையில் தொடங்கி, ‘எல்லோருக்கும் நன்றிகள்’ ஈறாக 34 ஆக்கங்களை இந்நூலில் காணமுடிகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 387ஆவது நூலாக வெளிவந்துள்ளது.