கல்முனை நோ.இராசம்மா (இயற்பெயர்: திருமதி இராசம்மா சண்முகநாதன்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
x, 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4041-02-8.
25.12.1947இல் அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்த நோ.இராசம்மா தனது 18ஆவது வயதில் இருந்தே கவிதைகளை எழுதி வந்தவர். இவரது முன்னைய கவிதைத் தொகுதி 1977இல் ‘ஒரு துளி’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது. தமிழ்த் தேசியத்தின்பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பின்னாளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெண்கள் பிரிவில் தீவிர செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டவர் இவர். பல அறவழிப் போராட்டங்களில் பங்கேற்றுமுள்ளார். கல்வித்துறையில் முன்பள்ளிக் கல்வித்துறையில் விசேட டிப்ளோமா பயிற்சியில் தேர்ந்த இவர் முன்பள்ளித் திட்ட இணைப்பாளராகப் பணியாற்றியவர். தனது படைப்புகளை கல்முனை நோ.இராசம்மா, இராஜி சண்முகநாதன், கல்முனை ராஜீ ஆகிய புனைபெயர்களில் எழுதிவந்துள்ளார். இத்தொகுதியில் ‘காலமெல்லாம் என்னோடு இணைந்திருப்பாயம்மா’ என்ற கவிதையில் தொடங்கி, ‘உயிர்’ என்ற கவிதை ஈறாக 55 கவிதைகளை தொகுத்தளித்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113463).