17573 மடை திறக்கும் மௌனம்.

சங்கரி சிவகணேசன். தமிழ்நாடு: படைப்பு பதிப்பகம், இல. 8, மதுரைவீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர் 607 002, 1வது பதிப்பு, 2023. (சென்னை: படைப்பு பிரைவேட் லிமிட்டெட்).

128 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-93-90913-72-5.

முழுக்க முழுக்க காதலைக் கொண்டாடும் எழுபது தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. இலங்கையைப் பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்தை வாழிடமாகவும் கொண்டவர் சங்கரி சிவகணேசன். உன் நிலம் நோக்கி நகரும் மேகம், அரூப நிழல்கள் ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் இவரது மூன்றாவது நூல் இது. ‘தனிமை தவிப்பின் தனித்துவத்தை இருளில் ஒளிரும் விட்டில்கள் எடுத்துச் சொல்லும். வரங்களைத் தவிர்க்கும் தவங்களில் இரு சோடிக் கண்கள் மாட்டிக்கொள்ளும் மனத்திற்குள் நிகழும் மாயத்தை மௌனங்கள் வழியே பேசிச்செல்லும் இருவேறு பார்வைகளின் சமத்துவத்தைக் காதல் மட்டும்தானே சமன்செய்யும்? கண்ணால் காணும் யாவையும் காண்பவர்கள் சொந்தம் கொண்டாட இயலாது என்றாலும், காணாததைக் கூட கண்கள் சொந்தம் கொண்டாடிக்கொள்ளும் என்பதே காதலின் மகத்துவம். அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான காதலின் மகத்துவத்தை எல்லாம் கவிதைகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே மடை திறக்கும் மௌனம் என்ற இக்கவிதைத் தொகுதி (ஜின்னா அஸ்மி, பதிப்பாளர்).

ஏனைய பதிவுகள்