செல்வன் (இயற்பெயர்: நடா. சுப்பிரமணியம்). லண்டன்: ஈஸ்வர சந்தானமூர்த்தி, மகிழினி பதிப்பகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 142, ஜானி ஜான் கான் ரோடு)
152 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.
லண்டனில் வசிக்கும் கவிஞர் செல்வன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டத்தையும், டென்மார்க்கில் Copenhagen Busines School இல் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். ‘மனதோடு பேசுதல்’ இவரது முதலாவது கவிதைத் தொகுதி. இத்தொகுப்பின் கவிதைகள் அனைத்திலும் வலிகளும், குதூகலமும், மகிழ்வும், துயரமும், காதலாகவும், நட்பாகவும், விடுதலைக்கு ஏங்கும் மனதோடும் சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91269).