ரவிகுமார் மதுமிதன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
vi, 64 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-86-3.
வவுனியா, தோணிக்கல்லைச் சேர்ந்த கவிஞர் மதுமிதனின் 35 கவிதைகளின் தொகுப்பு இது. விபுல விநாயகர் துதியுடன் தொடங்கும் இத் தொகுதியில் தமிழ், மேகா, வானோடு விளையாடு, இருளெனப் புரள், வவுனிய வானம், பனித்துளி, இராத் தேர்தல், நிலவு தொலைந்தால், தீர்ப்பு, பூமிக்கு வராதே, தேம்பல் வினவுதடி, பிரிவாற்றாமை, பால்ய காதல், அற்றைத் திங்கள் அந்நிலவில், கருகாதிருக்க, எவ அவ, அவள் சூழழகு, நிலா விருந்து, அவனும் நானும், நண்பனே சில கேள்விகள், அன்றும் இன்றும், விரலோடு கரம், பந்துருளும் பகற்கனவு, கழிப்பறைக்குள் போகின்றேன், புறப்பட்டாள், அவள் பூமிக்கிழவி, எங்கே, வாழ்ந்து கெட்ட வீடு, மயிலிறகு, வந்திய வாக்குமூலம், வழக்குப் பிழை, சாயங்கால காடுகள், நீ காதல் சொல்கிறாய், கதிர்காமக் கந்தன் ஆகிய தலைப்புகளில் இவ்விளங் கவிஞர்; எழுதிய 35 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 359ஆவது நூலாக வெளிவந்துள்ளது.