கவியாயினி (இயற்பெயர்: வீ.வித்தியாயினி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
108 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-41-2.
இளம் கவிஞர் வீ. வித்தியாயினி, இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பலாங்கொடை நாமகள் பாடசாலை, பலாங்கொடை கனகநாயகம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் மாணவியாகவிருந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைத்துறை இளமாணிப்பட்டத்தை பெற்று, ஆசிரியர் பயிற்சியை மட்டக்களப்பு ஆசிரிய கல்லூரியில் பெற்று, இன்று இரத்தினபுரி-வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவருகின்றார். ஆசிரியப் பணியுடன் நின்றுவிடாது, தன் எழுத்துக்களாலும் ஒரு சமூக மாற்றத்தைக் கண்டுவிடவேண்டும் என்ற துடிப்பு மிக்கவர். தன் கவிவரிகளால் தான் வாழும் எழில் மிகுந்த மலைநாட்டுச் சூழலில் தான் கண்ட புதுமைகளையும் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கின்றார். தான் சார்ந்த சமூக அவலங்களைக் கண்டு தேயிலை மலைக்குள்ளிருந்து குமுறும் எரிமலை இவர். சமூக அவலங்கள், சீர்கேடுகள், துரோகங்கள் என நீளும் ஒவ்வொன்றின் மீதும் அவரின் உணர்வுகள் தீ மூட்டுகின்றன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 321ஆவது நூலாக வெளிவந்துள்ளது.