கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் (புனைபெயர்: கவிகலி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
108 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-98-6.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘மூதாட்டியும் மந்தை வளர்ப்பும்’ என்ற முதற் கவிதை தொடங்கி, இறுதிக்கவிதையான ‘அபலைப் பெண்’ என்ற எண்பதாவது கவிதை வரையில் கவிஞர் கவிகலியின் கவிதைகள் அனைத்தும் ஈழத்துச் சூழலில் இருந்து புலம் பெயர்ந்த சூழல் வரை மனிதர்கள் படுகின்ற பல்வேறு விதமான சோதனைகளையும் அதனால் படுகின்ற இன்னல்களையும் எடுத்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன. குறிப்பாக, உலகம் முழுவதிலுமே நிகழும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் ஆணாதிக்கப் போக்குகளையும் வெளிப்படையாகவே இக்கவிதைகள் எடுத்துச் சொல்கின்றன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 378ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29884).