இயல்வாணன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன்). சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (சென்னை 600093: வேரல் புக்ஸ்).
78 பக்கம், விலை: ரூபா 675., இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-96062- 03-3.
இத்தொகுப்பில் இயல்வாணனின் 47 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இயல்வாணன் 1991 முதல் தான் எழுதிய கவிதைகளின் பெருமபாலானவற்றை இத்தொகுப்பில் இடம்பெறச்செய்துள்ளார். இக் கவிதைகளின் வழியாக சுமார் 32 ஆண்டுக்கால யாழ்ப்பாணத்துச் சமூக உணர்வுகளையும், அவ்வக்காலத்தில் கவிஞனின் பார்வைக் கோணங்களையும், அவனது மன உணர்வுகளின் வெளிப்பாடுகளையும் பதிவுசெய்வதாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின், சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இயல்வாணன் என்ற புனைபெயரில் வாழும் ஸ்ரீகுமரன். இலங்கையின் கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் இவர், ஆக்க இலக்கியத்துறையுடன், ஒளிப்படத்துறை, பத்திரிகைத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சுவடுகள் (நாவல்-1992), அற்றுப்போன அழகு (கட்டுரைகள்- 2000), செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் (சிறுவர் பத்திகள்- 2008), பாக்கியம் பாட்டியின் விண்வெளிப் பயணம் (சிறுவர் நவீனம்-2017), கந்தரோடை தந்த தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளையின் தமிழ்த்தொண்டு (2018), புலர்காலையின் வலி (சிறுகதைகள்- 2022) உள்ளிட்ட பல நூல்களை தனியாகவும், கூட்டு முயற்சிகளாகவும் எழுதியவர் இவர்.