17582 யாவும் ஆனந்தமே.

அஷ்வினி வையந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-76-5.

சிவரூபினி (அஷ்வினி வையந்தி) திருக்கோணமலை  மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கிளிவெட்டி மகா வித்தியாலயத்திலும் கற்ற இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்று, அங்கு தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இந்நூலில் இவர் யாவும் ஆனந்தமே, அவள் ஒரு சிறந்த தாய், புன்னகை, உன்னை அதிகமாக தேடுகிறேன், இளமை, தனிமை, அவர்கள் அப்படித் தான், நினைவுகளைச் சுமத்தல், அதுதான் தெரியும், ஏக்கம், இவள் எழுத்து, வாழ்க்கை அழகாகும், மன்னித்துக் கொள்ளுங்கள், விடுபடுதல் என்பது, பாவிகள், அந்த ஏழு நாட்கள், அத்தனை கோபமும் அவன்மேல் தான், சில ஆசைகள் சில எதிர்பார்ப்புகள், ஏதோ ஒன்று, சில பாவங்கள், தேநீர், ஆசைகள் பலவிதம், ஒரு தாயின் கதறல், பெண் ஒன்றும் அடிமை இல்லை, கைகூடாக் காதல், பிடிக்காத இடங்களில் நான், என் இரவுகள், பறவையின் கதை இது, ஆசைப்படுங்கள், புத்தகப் பேதை, அந்த நாள், அவன் எனக்கு அண்ணன், அம்மா உன்னை, முன்பெல்லாம், அந்தச் சிலுவை, குறுங் கவிதைகள் ஆகிய தலைப்புகளில் எழுதிய 36 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 256ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 110175).

ஏனைய பதிவுகள்

Aproveite Os Busca

Content Dê uma passada neste site: Nosso Casino Escolhido Melhores Sites Criancice Slots Uma vez que Arame Atual Acercade 2024 Acesse todos os jogos da