சுப்பிரமணியம் ஜெயசீலன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
136 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-17-1.
‘விரிகிறது வானம்’ என்ற கவிதையில் தொடங்கி ‘நட்பும் கணிதமும்’ என்ற கவிதை ஈறாக சு.ஜெயசீலன் எழுதிய 56 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘எனது கவிதைகள் இறைவன் எழுதுவித்தவை. இயற்கை கண்களில் காட்டியவை. பறவைகள் பாடிக் காட்டியவை. இயற்கையைக் காணும் போது இயற்கை என்னிடம் என்ன சொன்னதோ, கண் மூடித் தூங்கும் நேரம் வந்த கனவுகள் என்ன அதிசயம் காண்பித்ததோ, கண்திறந்த நேரம், குளித்துவிட்டுப் பார்க்கையில் என்ன உடைமைகள் பறிபோய் இருந்ததோ, மனிதர்களிடம் நான் என்ன என்ன சொன்னபோது என்னை வேறுபட்டவனாய் எண்ணி நகைத்தார்களோ, அத்துடன் பனுவல் கடலில் மூழ்கி எழுந்த அனுபவங்களும் அவை எல்லாம் இந்தக் கவிதைகளில் கருப்பொருட்கள்.’ (ஆசிரியர், என்னுரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 392ஆவது நூலாக வெளிவந்துள்ளது.