மஸாஹிரா கனீ. பாணந்துறை: திருமதி மஸாஹிரா கனீ (றூஹானி யஹியா), 36/3, ஜயா மாவத்தை, வட்டல்பொல, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023 . (மாத்தறை: Farhan Aththas, Lake House).
(10), 86 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-93031-0-2.
கவிஞர் மஸாஹிரா கனீ மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அலிகார் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப இடைநிலைக் கல்வியைப் பெற்றவர். அமரர் எம்.எச்.எம். ஸம்ஸ் அவர்கள் நடத்திய ‘கவிதைப் பூங்கா’ சஞ்சிகையில் இவரது பெரும்பாலான ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. அத்துடன் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, மித்திரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. உள்ளக இடப்பெயர்வுகளின்போது தான் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்த இவரது கவிதைகளின் தொகுப்பாக ‘வடதிசை’ கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ஒன்றுமேயில்லை, எங்கள் கிராமம், இன்றங்கே, இதுவும் கடந்து, சந்நிதி, என் பூமித் தாயே, என் தேசம், மனிதனெனும் போது, அது ஒரு அழகிய மழைக்காலம், கரித்துண்டு, அது அழகிய விளையாட்டுக் காலம், கிழிஞ்சலாய் நீ, அலிகாரின் பாடசாலை கீதம், இயற்கையும் கீரையும், மீன் குழம்பு, பவளப் பாறை, பட்டிமாடு கட்டி, புதையாப்பிட்டி, பாடல், எதிர்கால ஏக்கம், பாடல், அன்னையுனை தேடுகிறேன், என் நிழல் மட்டும், அகதி, மரங்கொத்தி, அந்த நாள் நோன்பு காலம், உயிர் காக்கும் விவசாயி, ஊர், வாழ்க்கையில் வறுமை, ஏன், விழாக்காணும் வளைவு, அலங்காரப் பெண், தாரகையே, மொழி, தேடல்கள், எம்மூர் விளையாட்டு மைதானம், ஓடிடுவோம் வாருங்கள், வட திசை, மனைவியாரென, வஞ்சம், தாயே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 41 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71702).