சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், 1வது பதிப்பு, ஜ{லை 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
70 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98956-5-2.
பொறி விழிகள் திறவீரோ, கடவுள் அது நீயே, எமையே தறிக்க எழுகிறதே, பகுத்தறிவில் துளிர்க்கட்டும், உறவின் உயிர்ப்பு, உயிர்த்தோட்டம் என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் 50 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந் நூலாசிரியர் ஒரு பொது சுகாதாரப் பரிசோதகராவார். பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளவர்.