பாலசுப்பிரமணியம் சிவாந்தினி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
100 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-15-7.
இந்நூலில் சிவாந்தினி எழுதிய வானம் வசப்படுமா?, ஆதவன், கடவுள், அழகு, அம்மாவின் சேலை, பெயர், விபத்து, தங்கச் சங்கிலி, ஒத்திகை, பறவையின் பசி, நிகழ்காலம், கொடை, காதல், கார்த்திகை மாதம், கனவு, ஓய்வு நேரம், மழைக்குள் ஈர்ப்பு, மௌனம், கவிதை, 90 கிட்ஸ், அவள், நிகரற்ற பொக்கிஷம், உங்களுக்கென்ன, போகிற போக்கில்; இளையோர், சில கேள்விகள், இன்றைக்கும், நாங்கள் அக்கா தங்கை, எச்சம், ஏதிலி, நான், எதுவுமில்லை, கோபம், சிறைச்சாலை, அழுகை, அவளுக்கு இல்லை அம்மா, முதல் குழந்தை, அவன், தனி அறை வேண்டும், பேசாதவர்கள், இறுதித் தீர்ப்பு, கிடைக்குமா?, மனம், செல்லப்பிள்ளை, காலாவதியாகி விடுமா?, உன் காதலியாய் இருக்கவிடு, யாரின் பிழை, தொலைத்தல், தாமரைக் குளம், ஒற்றை ரோசா, அழகான நினைவுகள் ஆகிய தலைப்புகளில் வடித்துள்ள ஐம்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘உறைநிலையில் இருந்து திடீரென ஊற்றெடுத்துப் பிரவாகம் காணும் பனிக்கட்டி போல் சிவாந்தினியின் மனவோட்டத்தில் ஊற்றெடுத்த எண்ணக் கிடக்கையே இந்நூலாகும். கரிசல் நிலத்து வலிகளோடும் மறைந்தும் மறவாத தேசக் கண்மணிகளின் நினைவுகளோடும் தொடரும் இந்நூல் பல வாசகர் மனங்களை ஆட்கொண்டு நினைவழியாமல் நித்திலத்தில் நிலைபெறட்டும்.’ (பிரபா அன்பு, பின்னட்டைக் குறிப்பு). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 389ஆவது நூலாக வெளிவந்துள்ளது.