ச.வே.பஞ்சாட்சரம். கனடா: வெள்ளி அச்சுப் பதிப்பகம், மிஸிஸாக்கா, ஒன்ராறியோ மாகாணம், 1வது பதிப்பு, புரட்டாதி 2021. (Canada: Silver Print House and Publication, Mississauga, Ontario L5V 2G7).
xxxii, 80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16.5×12 சமீ.
வெள்ளி அச்சுப் பதிப்பகத்தின் ஏழாவது பிரசுரமாக இக்கவிதைத் தொகுதி வெளிவருகின்றது. பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் கொரோனா முடக்கக் காலத்தில் எழுதிச் சேகரித்து வைத்திருந்த ஹைக்கூ கவிதைகள் இவை. மூன்று வரிகளில் அன்றாட நிகழ்வுகளையும் அனுபவங்களையும் பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் எளிமையான சொற்பதங்களைக் கொண்டு இக்கவிதைகளை கவிஞர் யாத்துள்ளார். ஈழத்துத் தமிழ் அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்பவர் கவிஞர் பண்டிதர் ச.வே.ப. ஆன்மீகத்தையும் தமிழையும் தனதிரு கண்களாகப் போற்றிவரும் ஆளுமையாளர். ‘யாப்பு இவரிடம் கைகட்டிச் சேவகம் புரிகிறது. சந்தம் இவரைச் சொந்தம் கொண்டாடுகிறது’ எனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் சிவலிங்கராஜா. ஈழத்துத் தமிழ்க் கவிதையின் மாறி வரும் பரிமாணங்களுக்கு முகம் கொடுத்து, இன்றும் தன் தடத்தினையும், தளத்தினையும் நிலைநிறுத்தியுள்ள ஒரு சில கவிஞர்களுள் ச.வே. விதந்த குறிப்பிட வேண்டியவர் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிடுகின்றார்.