யோனகபுர ஹம்ஸா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
60 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-11-5.
திக்குவல்லை பிரதேசத்தைச் சேர்ந்த யோனகபுர ஹம்ஸா, நீண்ட காலமாக எழுத்தூழியம் செய்து வருபவர். ஆசிரியராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர் ஆழ்ந்த இலக்கியப் புலமையுடையவர். சமுதாய நோக்கிலான பல கவிதைகளை இவர் எழுதிவந்துள்ளார். அவற்றின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். 2023இல் தனது 85ஆவது அகவையை பூர்த்திசெய்யும் யோனகபுர ஹம்ஸாவின் இந்நூல் இவரது ஐந்தாவது வெளியீடாகும். ஒளிபெறும் வாழ்க்கை, அடிமை, அன்புள்ள தங்கைக்கு, இழிஞரை அழிப்போம், அம்மா பாசம் எங்கே?, விளக்கே நீ விளக்கு, என்னிளமை கனிவதென்றோ?, கொந்தராத்து மகிமை, மாற்றம், மௌனியானேன், பேதங்கள் நீங்குமோ?, ஒரு வினா, குழந்தை, அமுதம் தேக்கும் குர் ஆன், மாலையில் கோல்பேஸ், சபதம் செய்வோம், நோன்பின் பலன் கோடியே, வெற்றி வீரர், புதைபொருள் ஆய்வு, நீதி தவறாத நிர்வாகி, ஒற்றுமைப் பாட்டு ஒலிக்கட்டும், சாகாவரம், நரபலி, கடைசிப் புகழ், வரவேற்பு, இலவசம், இருள், உரிமை, பொன்நகர்க் கோலம், உதயம் ஆகிய தலைப்புகளில் இவர் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 289ஆவது நூலாக வெளிவந்துள்ளது.