17596 வேர்களையறியா விழுதுகள்.

அம்பலவன் புவனேந்திரன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

xiii, 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5849-35-2.

நீண்டகாலமாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஜேர்மனியின் ஒபஹவுசன் நகரத்தில் வாழும் இக்கவிஞரின் கவிதைகள் தனது மண்சார்ந்த அவலங்களையும், போர்க்கால நிகழ்வுகளையும், போரின் வடுக்களையும், பேரினவாத ஒடுக்குமுறைகளையும், அவை பற்றிய விமர்சனங்களையும் பற்றிப் பேசுகின்றன. மேலும், போரின் காரணமாகத் தாயகத்திலிருந்து பிய்த்தெறியப்பட்டு புலம்பெயர்தலையும் சில கவிதைகள் பேசுகின்றன. புலம்பெயர் தேசத்தில் தமது முன்னோரின்ஃபெற்றோரின் புலம்பெயர்தல் தொடர்பான பூரண அறிதல் அற்றிருக்கும் எதிர்கால சந்ததிகள் தமது வேர்களையறியா விழுதுகளாக வாழும் அவலத்தை மிக அழகாகத் தனது கவிதைகள் மூலம் சமூகப் பொறுப்புணர்வுடன் வடித்துள்ளார். இவரது இன்னொரு ஜனனம் (1998), தீயின் வார்ப்புக்கள் (2000), முடிவல்ல ஆரம்பம் (2000, 2003) ஆகிய நூல்களைத் தொடர்ந்து நான்காவது நூலாக இது வெளிவருகின்றது. இது மகுடம் வெளியீட்டகத்தின் 70ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Gratis Klöver Vid Inskrivning

Content Prank Casino: casino Casinoluck kr100 gratissnurr Spelutbud Hos Casinon Inte med Svensk person Tillstånd Ultimat Casino Kungen Inter 2024 Hur Karl Betalar Villig Online