17598 உன்னத சங்கீதம்: நார்வேஜியக் கவிதைகள்.

பானுபாரதி (தமிழாக்கம்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-95256-03-2

நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட  பானு பாரதியின் கவிதைகள் இவை. பெரும்பாலும் பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட இக்கவிதைகளில்; பெண்ணிய அரசியல் கருத்துலகத்தைப் பின்புலமாகக் கொண்டு, மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்கள் பேசப்படுகின்றன. பெண்களின், பெண்களுக்கே உரிய காதல், தாய்மை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள் பல இதிலுண்டு. சில கவிதைகள் பட்டினி, போர் எனும் புறவய வெளிபாட்டை பேசுபவையாக உள்ளன. அவை பெண் குரலாக  நமக்குக் காதில் ஓங்கி அறைகின்றது. ஒரு குறுகிய இனமோ நாடோ அற்று மொத்தமான மனித வாழ்வின் தேறலை பிழிந்து  நமக்குத் தருகின்றன. ஆண்கள் சிந்திக்காத கோணத்தில் இருந்து அவைகள் வந்துள்ளன. நோர்வேயில்  வாழ்ந்து அந்த மனிதர்களிடம் பழகிய படியால் கலாச்சார கூறு மாறாமல் பானுபாரதியால் எமக்கு இக்கவிதைகளின் மொழிபெயர்ப்பினை வழங்கமுடிந்திருக்கிறது. மரிய தக்வாம், உன்னத சங்கீதம்: ஒரு வாசகியின் குறிப்பு-மரியான் ஸெய்டே, ஒரு பெண்ணின் பணி முடிவடைகின்றது, நொடிப்பொழுது, மீண்டுமொரு முறை, அருகருகாக, 1980, தாயின் குரல், குளிருறைந்த தெளிவான நாளொன்றில், இங்கர் ஹாகரூப், Aust vaagoy, விடுதலை, பொறுமையற்ற மனுவாய் இரு, என்னை இப்படித்தான் உனக்கு வேண்டும், அந்தக் கவிதை நான் தான், நான் தேடினேன், கார்த்திகையாள், பெண்ணாய் இருக்கப் பிறந்தவர்க்கு, Willy Flock, வலி-1, வலி-2, Stein Mehren, அருகாமை, Ingeborg Nastved, எனக்கொரு பூச்செண்டினை வழங்கிவிடுங்கள், Helge Vatsend, காதலும் சுதந்திரமும், இறந்துபோன ஒரு நண்பனுக்கு, ஒரு கவிதை ஒரு பறவை, ஒரு கோதுமை மணியளவு உண்மை, நடுத்தீர்வை நாளில், இறுதி வார்த்தை, உன்னத சங்கீதம் ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17542 குருதிச்சாரல்.

சிவலோகதாசன் சதுர். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், விலை: ரூபா 300., அளவு: