17600 விசிறி: 20ஆம் நூற்றாண்டின் மூன்று பிரெஞ்சுக் கவிஞர்கள்.

ஜெராட் றொபுஷோன் (Gerard Robuchon). யாழ்ப்பாணம்: யாழ்.பிரெஞ்சு நட்புறவுக் கழகம், 83, பலாலி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: அன்றா டிஜிட்டல் இமேஜ், காங்கேசன்துறை வீதி, கோண்டாவில்).

(72) பக்கம், 5 தகடுகள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-1675-01-1).

யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகம் (Alliance francaise de Jaffna) மார்ச் 2006 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு வாரமாக நடாத்திய கவிதைக் கண்காட்சியின் தொடர்ச்சியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சி  பிரான்சில் வருடாந்தம் இளவேனில் காலத்தில் நடத்தப்பெறும் கவிதைக் கொண்டாட்டத்தை (Francophonie) அடியொற்றியதாகும். இந்நூலில் இருபதாம் நூற்றாண்டில் நன்கறியப்பெற்றிருந்த கியோம் அப்போலினேர் (Guillaume Apollinaire), போல் குளோடெல் (Paul Claudel) விக்டர் செகலேன் (Victor Segalen) ஆகிய மூன்று பிரெஞ்சுக் கவிஞர்களின் அறிமுகத்துடன் அவர்களது கவிதைகளில் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்து விசிறி, வாழைமடல், மூங்கில், பலகை, சுவரொட்டி மற்றும் கூடைகள், மரத்திலான வாங்குகள், நாவல் நிறத் துணிகள் என்பனவற்றின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பிரெஞ்சுக் கவிதைகளுக்கான மொழிபெயர்ப்புகள் செயலமர்வு முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தின் இயக்குநர் ஜெராட் றொபுஷோன், தேவசுந்தரம் அபிராமி, ராஜா வந்தனா, சிவகுருநாதன் சிவகௌரி, அருட்சகோதரி செல்வசோதி ஆகியோர் தமிழாக்கத்தில் பங்கேற்றிருந்தனர். இக்கண்காட்சியின் மையக்கரு ‘கவிதையே ஒரு பொருளாக’ என்பதாகும்.

ஏனைய பதிவுகள்

16632 என்னைச் சுற்றி ஓர் உலகம்.

மதுபாரதி (இயற்பெயர்: திருமதி பரமேஸ்வரி இளங்கோ). திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம்,

14479 செய்முறை முகாமைத்துவ கைநூல்: இலங்கையின் கிராமிய, நகர, மக்கள் அமைப்புகளுக்காக: தொகுப்பு 1- அமைப்பு, நிர்வாகம், தொடர்பு முறைகள்.

பிரனாந் வின்செட். இராஜகிரிய: இரெட் வெளியீடு, ஆசிய பங்காளருக்கான இரெட் அபிவிருத்தி சேவை, இல.562/3, நாவல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (கொழும்பு: கருணாதாச அச்சகம்). iv, 57+(99) பக்கம், அட்டவணைகள், விலை: