17601 வீரனாக்குவது எது? மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு.

எஸ்.ஆர்.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம், 43/4, சனல் ஒழுங்கை, 1வது பதிப்பு, புரட்டாதி 2024. (வவுனியா: விஜய் பதிப்பகம்).

xii, 85 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93476-0-1.

நீங்களும் எழுதலாம்- கவிதைச் சஞ்சிகையானது, ஈழத்துக் கவிதை மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பின் அறுவடையே இத்தொகுப்பாகும். ‘நீங்களும் எழுதலாம்’ இதழ்களில் வெளியான கவிதைகளின் மொழிபெயர்ப்போடு மூலக்கவிதையையும் இங்கு தந்துள்ளனர். இதில் எடுத்தாண்டவையும் அடங்குகின்றன. மறுதலையாக ஒரு சில தமிழ் மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு பெயர்க்கப்பட்டனவும் உள்ளன.  மொழிபெயர்ப்பின் சகல சாத்தியங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதே இதன் நோக்கமாகும்.

ஏனைய பதிவுகள்