மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
42 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-57-7.
இந்நாடகம் 1973இல் எழுதப்பட்டு 01.07.1973இல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் தில்லைக்கூத்தனின் நெறியாள்கையில் மேடையேற்றம் கண்டிருந்தது. தேர்தல் அரசியலின் போலித் தனத்தையும், அரசியல்வாதிகளால் மக்கள் எவ்வாறு எமாற்றப்படுகிறார்கள் என்பதையும் குறியீடுகளின் வாயிலாக, அங்கதச் சுவையுடன் அழகாக இது எடுத்துச் சொல்கிறது. இவ்வளவு ஆண்டுகள் கடந்தும், அன்று போல் இன்றும் இந்நாடகம் உலகளாவிய ரீதியில் பொருத்தப்பாடு காணக்கூடிய படைப்பாக உள்ளது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகின் பல்வேறு பாகங்களிலும் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டு வந்துள்ளது. மாவை நித்தியானந்தன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் இயங்கிவரும் நாடகாசிரியரும் நெறியாளருமாவார். அடிமட்ட மக்களைச் சென்றடைந்த காத்திரமான பல நாடகங்களை உருவாக்கியவர். தமிழில் சிறந்த பல சிறுவர் நாடகங்களை ஈழத்தில் படைத்த முதன்மையான நாடகாசிரியர்களுள் இவரும் ஒருவர்.