சி.வ. ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை, வேந்தன் வெளியீடு, 11/01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
viii, 80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41133-1-2.
சத்திய வேள்வி (4 காட்சிகள்), வள்ளுவன் தூது (2 காட்சிகள்), இலட்சியத் துறவு (5 காட்சிகள்), வீரத் துறவு (5 காட்சிகள்), நாவுக்கரசனான மருள் நீக்கியார் (5 காட்சிகள்), புயலுக்குப் பின் (3 காட்சிகள்) ஆகிய நாடகங்களின் தொகுப்பு இது. சின்னார் வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை யாழ்ப்பாணம் மயிலிட்டியில் 1953 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 05ஆந் திகதி பிறந்தவர். தற்போது மலையாளபுரம் கிளிநொச்சியில் வாழ்ந்து வருகிறார். தனது ஆரம்பக் கல்வியை யாழ் மயிலிட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் பின்னர் யாழ் காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் ஆங்கில மகா வித்தியாலயத்திலும் பயின்றவர். அவரது பாடசாலைக் காலத்தில் ஆண்டு விழாக்களில் மேடையேற்றப்பட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மன், சாம்ராட் அசோகன், ஒதெல்லோ, வெனிஸ் நகர வணிகன், மார்க் அன்ரனி ஆகியவற்றில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர்.