17613 பொன்னையா விவேகானந்தனின் நாடகங்கள்.

பொன்னையா விவேகானந்தன். கனடா: ழகரம் வெளியீட்டகம், 86, கோல்டன் அவென்யூ, மார்க்கம், ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை: தி பிரின்ட் பார்க்).

116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கனடா, தாய்வீடு அரங்கியல் விழாவில் பொன்னையா விவேகானந்தன் எழுதி மேடையேற்றிய உள்ளொன்று, கணம் கரையும் பொழுதில், யார் இட்ட தீ, அகவெளிப் பொய்கள், சுமை ஆகிய ஐந்து நாடகங்களின் எழுத்துவடிவமாக இந்நூல் அமைந்துள்ளது. இந்த நாடகங்களின் கதை மாந்தர்களாக கவிஞர் அ.கந்தசாமி, பி.ஜெ.டிலிப்குமார், கந்தசாமி கங்காதரன், பொன்.பாலராஜன், அ.இராசரத்தினம், ஜனகன் சிவஞானம், மாலா விவேகானந்தன், ஆயணி விவேகானந்தன், பிரதாஜினி சந்திரகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்