காயத்ரீ சிறீகந்தவேல் (தமிழாக்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-02-3. கன்னட மூலமொழியில் எழுதப்பட்ட இந்நாடகம் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தாயும் மகனுமான இரண்டு கதாபாத்திரங்களே இந்நாடகத்தில் ஊடாடுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அளவெட்டியை தாயகமாகக் கொண்ட காயத்ரீ சிறீகந்தவேல் தனது ஆரம்பக் கல்வியை அளவெட்டி வடக்கு அ.மி.த.க. பாடசாலையிலும், இரண்டாம் தரக் கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகமான மொழிபெயர்ப்புக் கற்கைத் துறையின் முதலணியில் சேர்ந்து முதல் வகுப்பில் சிறப்புப் பட்டம் பெற்று அத்துறையிலேயே தகுதிகாண் விரிவுரையாளராகி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிரயோக மொழியியலில் முழுநேரப் பட்டப்பின் படிப்பினை மேற்கொண்டு முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சிபெற்று தற்பொழுது ஹைதராபாத் ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கற்கைத் துறையில் தன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.