கதிர் திருச்செல்வம். திருக்கோணமலை: கதிர். திருச்செல்வம், 48/116, விநாயகபுரம், கண்டி வீதி, 1வது பதிப்பு, 2019. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).
xx, 141 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-624-95654-0-1.
அடக்குமுறைக்கு உட்பட்ட ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும், போராளியாகவும் ஆசிரியர் தனது அனுபவங்களை, இந்நூலில் 50 குறுங்கதைகளாகப் பதிவுசெய்துள்ளார். இக்கதைகளில் தமிழ்ச் சூழலில் எழும் பழைய கேள்விகளுக்கு புதிய பதில்களை கண்டடையும் முயற்சியைப் பார்க்கமுடிகின்றது. பேரினவாத அரசினாலும் இராணுவ ஆதிக்கத்தினாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘பெரு மதவாத பூதத்தால்’ நசுக்கப்படுகின்ற புதிய சூழலில் இக்குறுங்கதைகள் புதிய போராட்ட முறைமைகளை கண்டடைவதற்கு துணை நிற்கும்.’ (வாழ்த்துரையில் – பசீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டம்).