கதிர் திருச்செல்வம். திருக்கோணமலை: நம்மட முற்றம், 1வது பதிப்பு, 2023. (மூதூர்: ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்).
x, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-94949-4-7.
இந்நூலில் உறவுகள் சொல்லும் உணர்வு, உறங்கிய உள்ளங்கள், நாக்கிளிப்புழுவும் மீனும், திரண்ட மிடுக்கு, பகிர்ந்த வளமும் மலர்ந்த உறவும், காலத்தால் மாறும் மனங்கள், ஏலாதெண்டு ஆர் சொன்னது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவரான கதிர். திருச்செல்வம், உயிரோடு நானாக, உயரப் பார், உனக்குள நீ, என்ற வரிசையில் தனது நான்காவது நூலை வெளியிட்டுள்ளார். இயற்கையின் மீதான அவரத ஈடுபாட்டை அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. கல்வி, பொருண்மியம், சுற்றுச் சூழல் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட இவரது கதைகளில் மக்கள் நலம்சார் கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன.(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111384).