17645 உறைந்துபோன உண்மைகள்: சிறுகதைகள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-34-8.

இந்நூலில் எம்.கே.முருகானந்தனின் இனி நான் என்ன செய்ய?, முருகுப்பிள்ளை பேய், உறைந்துபோன உண்மைகள், எங்கட வீட்டில் சன்டா, யாமிருக்கப் பயமேன், சோதனை, புரியாத பாதை, ராமச்சந்திரமூர்த்தி வருவானா? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கால கட்டத்தின் பிரதிபலிப்பாக மனித மனங்களின் ஏக்கங்களையும் அவலங்களையும் போர்க்கால உள நெருக்கீடுகளையும் இவரது கதைகள் பேசுகின்றன. வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன் அவர்கள் ஈழத்தில் நன்கறியப்பட்ட ஆளுமையாக விளங்கிவருபவர். மருத்துவத்துறையில் இவரால் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் மக்களுக்கு மிகுந்த பயன்பாட்டை வழங்கிவருபவை. நீண்டகாலமாக இலக்கியத்துறையிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் என்பவற்றையும் தனக்கானதொரு தனித்துவப் பாணியில் படைத்து வருகின்றார். இந்நூலின் மேலட்டையில் ‘உறங்கும் உண்மைகள்’ என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 409ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Prelone A Buon Mercato Catania

Migliore farmacia Per ordinare prelone. Acquistare prelone dallEuropa online. VISITA la nostra farmacia online Questo permette loro di ordinare questo prodotto comodamente dal loro cellulare