பாலு மகேந்திரா நூலகம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
191 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6567-00-2.
எங்கட புத்தகங்களின் 11ஆவது வெளியீடாக கிளிநொச்சி, பாலு மகேந்திரா நூலகத்தின் ‘எங்கட கதைகள்-2’ வெளிவந்துள்ளது. பாலு மகேந்திரா நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி 2022ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக சிறுகதைப்போட்டியை நடத்தி, நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட 14 சிறுகதைகளைச் சேர்த்து அவற்றை இந்நூலில் தொகுத்திருக்கிறார்கள். போட்டிக்கென அனுப்பிவைக்கப்பட்ட 135 சிறுகதைகளில் இருந்து நூலக நிர்வாகத்தினரால் தேர்வுசெய்யப்பட்ட 25 சிறுகதைகள் நடுவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பெற்ற ‘மலர்’(கேசலா சுந்தரம்பிள்ளை), ‘வரலாறு இனி மாறுமோ?’ (சா.ஜனனி), ‘எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்’ (சுப்பிரமணியம் நவமணி) ஆகிய கதைகளுடன், ஆறுதல் பரிசுபெற்ற, ‘உறவுகள் தொடர்கதை’ (மஹின் சுப்பிரமணியம்), ‘ஓர் உயர்மட்ட தீர்மானம்’ (அப்துல் வாஹிது முஹ்ஸீன்), ‘கருணையில்லா காலம்’ (சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்), ‘கொல்லாமல் கொல்கிறீர்கள்” (சிற்றம்பலம் சண்முகநாதன்), ‘கையெழுத்து’ (தவராசா செல்வக்குமார்), ‘சந்திராக்கா’ (இரத்தினம் பிரதீபன்), ‘தீராசாபம்’ (குமார் சுகுணா), ‘பதுங்குகுழி’ (பொன் குலேந்திரன்), ‘மரணம் ஈன்ற ஜனனம்’ (சுதாமா செல்வரட்ணம்), ‘மருதாயி’ (மதிவதனி குருச்சந்திரநாதன்), ‘வயிறு’ (தங்கராசா இராஜராஜேஸ்வரி) ஆகிய 11 கதைகள் அடங்கலாக மொத்தம் 14 கதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.