17647 எதிர்மறை: சிறுகதைத் தொகுதி.

நீ.பி.அருளானந்தம். வவுனியா: திருமகள் பதிப்பகம், இல.102, 1ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஆவணி 2023. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி).

x, 196 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-6049-02-7.

இலங்கையின் இலக்கிய இயங்கு தளத்தில் பிரபலமான எழுத்தாளராக அறியப்பட்டவர் நீ.பி.அருளானந்தம். இவர் வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குளம் என்னும் இடத்தினைப் பிறப்பிடமாக கொண்டவர். நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையாவினதும் சுவாம்பிள்ளை லூர்தம்மா என்பவர்களின் மகனாகப் பிறந்தவர். இவர் நாவல், சிறுகதை, கவிதை என பல்துறை சார்ந்த இலக்கிய தளத்திலும் தனது ஆற்றல்களை வெளிக்காட்டிவருபவர். இருபத்து நான்கு நூல்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்தும் எழுதிவருகின்றார். இத்தொகுப்பில் அவர் எழுதிய 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை நெஞ்சத்து இரகசியம், ஆம்பல், கனவுப்பூ, சிவந்த கண், துயரார்ந்த மறைவுகள், மனம் செலுத்தும் திசை, தீபச்சுடர், இது ஒரு பேய்க்கதை, எதிர்மறை, கசந்து செல்லும் நாட்கள், உருவமும் குணமும், இரண்டாவது வாழ்க்கை, வானவில், நிலைமாற்றம், பிரதி அசலாகாது, வெறும் வெளி, தலைக்கு மேல், எப்பொழுதும் உயர்ந்தவர், இரண்டு பன்றிகள் தூக்கியவன், சிதையாத அன்பு, இளமையின் வசந்தம், வேளாண்மை விளைச்சல், வீரன் விளையாட்டு ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71380).

ஏனைய பதிவுகள்

16954 தமிழா உன்னைத்தான்.

காசி. ஆனந்தன் (இயற்பெயர்: காத்தமுத்த சிவானந்தன்). கொழும்பு: படைஞர் பாசறை, 1வது பதிப்பு, மார்ச் 1970. (கொழும்பு 2: அருளொளி அச்சகம்). (4), 24 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18×12 சமீ.