ராஜாத்தி (இயற்பெயர்: வெள்ளத்தம்பி தவராஜா). மட்டக்களப்பு: படி கலாசார வட்டம், 200, பழைய கல்முனை வீதி, நொச்சிமுனை, 1வது பதிப்பு, ஆவணி 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
98 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-43875-0-8.
கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளரும் ‘ராஜாத்தி’ என்ற புனைபெயரில் எழுதும் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆய்வாளருமான வி. தவராஜாவினால் எழுதப்பட்ட ‘என் கொலைகாரர்கள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் இதுவாகும். கொலைகாரர்கள், அழகுராணி, யுத்தகாண்டம், விசாரணைகள், வயிரவன் சடங்கு, என் கடன் பணிசெய்து கிடப்பதே, அந்தப் பெண், ஆடுகள் ஆகிய தலைப்புகளில் 2000- 2006 காலகட்டத்தில் எழுதப்பட்ட எட்டு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் உள்ள அழகுராணி, அந்தப் பெண், யுத்தகாண்டம், ஆடுகள் ஆகிய நான்கு கதைகளைத் தவிர, எஞ்சிய கதைகள் அனைத்தும், யுத்தத்தின் அகோரத்தை, வலியை, அநீதியை, பக்க விளைவுகளை, நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுபவை. இந்தப் படைப்புகளில் வெளிப்படும் அவரது கருத்துநிலை எந்த அரசியல் அமைப்பையோ அரசையோ சார்ந்ததுமல்ல. சாமானிய மக்களின் சார்பாக எழுகின்ற குரல் இது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107251).