ஆனந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-90-9.
ஜீவநதி சஞ்சிகையின் 20ஆவது இதழ் தொடக்கம் 122ஆவது இதழுக்கு இடைப்பட்ட இதழ்களில் ஆனந்தி எழுதி வெளியான 18 கதைகளுள் தேர்ந்த 11 சிறுகதைகளும், ஏனைய சஞ்சிகைகளில் அவர் எழுதிய மூன்று கதைகளுமாக மொத்தம் 14 கதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு சமநிலை வைத்தியம், வேதம் கண் திறக்கும் விடியலே ஒரு சவால் தான், ஒரு சத்திய தேவதையின் தரிசன ஒளியில், அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம், அழுகை ஒரு வரம், கல்லுக்குள் ஈரம், ஓரு இறைதூதனின் மயக்கம், காற்றில் பறக்கும் தமிழ், வழித்துணை, மறைப்பொருள் மயக்கம், அந்த முகம், உயிர் விட்ட தமிழும் உறங்கும் உண்மைகளும், காணாமல் போகும் கற்பு தேவதைகள், சபை ஏறாத ஒரு வழக்கு சாந்தி வேதமாகிறது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. மென்மையான பெண்ணிய உணர்வுகளை தன் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் வெளிப்படுத்தும் ஆனந்தி, ஏற்கெனவே ‘துருவ நட்சத்திரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘ஆனந்தியின் இரு குறுநாவல்கள்’ தொகுப்பையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 115ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 94091).