கோபிகை (இயற்பெயர்: திருமதி ஜயிலா பார்த்தீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 102 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-89-5.
இத்தொகுப்பில் காதலின் ஆலாபனை, மாயவலை, ஒரு மெழுகென, அவளுக்கும் மனசு உண்டு, நாட்குறிப்பேடு, ககனம் கடந்த கானம், அந்த நுணா மரத்தடி, உயிர்ப்பு, கண்ணாடிச் சிற்பங்கள், வேரைத் தின்ற விசம், தந்த பவனம், காலநதி, ஈரச்சிறை, மாதுளாவின் மைந்தன், அவளும் நானும் ஆகிய பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 269ஆவது நூலாக வெளிவந்துள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணத்தில் கரணவாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவியான இவர் ‘ஒளி அரசி’ என்ற சிறு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் செயற்பட்டவர். இவரது கதைகளில் பெண்களின் பிரச்சினைகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், சமூக ஒடுக்குமுறைகள், இன ஒடுக்குமுறைகள், ஈழப்போரின் அவலங்கள் என்பன பகைப்புலமாக அமைந்துள்ளன.