வாசுகி சொக்கன் நடேசன். இத்தாலி: ஸ்லீ பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: புனிதவளனார் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி).
xv, 158 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ.
84 பக்கங்களில் அமைந்த வாசுகியின் சிறுகதைகளான ஊனம் மனதுக்கல்ல, கொட்டில், பாப்பாவுக்கு ஒரு நாள் கழிகிறது, போர்முகம், ஆலய தரிசனம், இருப்பைத் தேடும் மனிதர்களும் சில அந்தரங்கங்களும், உடையும் விலங்குகள், ஆனந்த சுதந்திரம், முரண்கள், கடவுள் மீண்டும் வரவாரா?, இயலாமை, ஞானி, பாவ மன்னிப்பு, ஆதிமந்தி ஆட்டனத்தி ஆகிய 14 சிறுகதைகள், 39 பக்கங்களில் அமைந்த ‘கடல்’ என்னும் குறுநாவல், 29 பக்கங்களில் அமைந்த ‘சக்தி தனக்கே கருவியாக்கு’ என்னும் நாடகப் பிரதி என்பவற்றை உள்ளடக்கிய நூல் இது. ஈழத்தமிழ் மக்களின் சமகால வாழ்வின் எண்ணத் தெறிப்புகளின் இலக்கிய வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் பிறந்த திருமதி வாசுகி சொக்கன் நடேசன் தற்போது இத்தாலியில் வாழ்ந்துவருகிறார். ஆரம்ப காலத்தில் செல்வி வாசுகி சொக்கலிங்கம் என்ற பெயரில் உரைநடைத் தெளிவு, மருதத் திணை ஆகிய நூல்களை எழுதியவர். மருதத்திணை இவரது பட்ட ஆய்வின் நூல்வடிவமாகும். ஈழத்தின் முன்னோடி இலக்கியவாதியான சொக்கன் (அமரர் க.சொக்கலிங்கம்) அவர்களின் இளைய மகளாவார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104857).