17656 கடவுள் தான் அனுப்பினாரா?: சிறுகதைகள்.

ராணி சீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

110 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-04-7.

ஓட்டிசம் (Autism) என்பதற்கான தமிழ்ப் பதம் தீரனியம் எனவும் தன்னியம் எனவும் இருவேறு வார்த்தைகளால் சொல்லப்படுகிறது. ஓட்டிசம் என்ற நிலைப்பாடு உலகளாவியரீதியில் அதிகரித்து வருவதை உலக சுகாதார மையத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இத்தகைய பிள்ளைகளை இனங்கண்டு உதவுவதன் அவசியத்தை இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் உணர்த்தத் தலைப்படுகின்றன. மக்களிடையே ‘ஓட்டிசம்’ பற்றிய விழிப்புணர்வினை ஊட்டும் வகையில் இச்சிறுகதைகளை ஆசிரியர் எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணத்திலுள்ள ‘இளந்தளிர்’ அமைப்பினருடன் இணைந்தவொரு செயற்பாட்டாளராகவிருந்து தான் பெற்ற அனுபவ அறிவினை இக்கதைகளில் தாராளமாகப் பொதிந்துவைத்துள்ளார். இத்தொகுப்பில், அப்பாவின் மருந்துப்பெட்டி, அவள் எங்கே ஓடுகிறாள், இடைவெளி, கடவுள் தான் அனுப்பினாரா?, கையொழுங்கையும் சீ.சீ.ரீ.வி கமராவும், காணாமல் போன கண்ணீர் அஞ்சலி, சோறுண்ட கண்டன், தற்கொலைப் போராளி, மௌனம் தான் பேசியதோ?, ஒரு பைத்தியம் அழுகின்றது, வித்தியாசமான விளம்பரம் ஆகிய 11 கதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 291ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15446 பாதுகாத்துக் கொள்வோம்: சிறுவர் கதை.

செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்). (2), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 14.5×20.5 சமீ., ISBN: 978-955-4609-08-2. சிறுவர்கள்