பார்த்திபன். சுவிட்சர்லாந்து: தமிழச்சு வெளியீடு, Zugerstr, 51, 6340 Baar 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (சென்னை 600 005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ், திருவல்லிக்கேணி).
334 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-3-033-06446-1.
1984இல் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர் பார்த்திபன். இவர் எழுதிய 23 கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் ஒரே ஒரு ஊரிலே, பாதியில் முடிந்த கதை, காதல், பசி, மனைவி இறக்குமதி, ராதா பெரிசானபின், நாளை, ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும், அம்பது டொலர் பெண்ணே, தெரியவராதது, ஒரு அம்மாவும் அரசியலும், பனியில் எரியும் இரவுகள், வந்தவள் வராமல் வந்தால், ஒரு பிரஜை-ஒரு நாடு, தூள், அம்மா பாவம், இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ., மேற்கின் ஒரு பக்கம், பலமா?, தீவு மனிதன், கெட்டன வாழும், மூக்குள்ளவரை, கல்தோன்றி ஆகிய தலைப்புகளில் பார்த்திபன் எழுதிய கதைகள் இந்நூலின் முதலாம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. ‘வாசிப்பு’ என்ற இரண்டாம் பகுதியில் சு.குணேஸ்வரன், மு.வேணுகா, செண்பகவல்லி, வளர்மதி, அ.இரவி, பி.ரயாகரன், நிருபா, யமுனா ராஜேந்திரன், சுகன், திருமகள், டிசே தமிழன், க.பூரணச்சந்திரன் ஆகியோர் அவ்வப்போது பார்த்திபனின் படைப்புகளுக்கு வழங்கிய விமர்சனப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.