17658 கருங்குயில்.

ஷோபாசக்தி (இயற்பெயர்: அன்ரனிதாசன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

164 பக்கம், விலை: இந்திய ரூபா 200.00, அளவு: 20.5×13 சமீ., ISBN: 978-93-95256-25-4.

ஷோபாசக்தியின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு. நவம்பர்-டிசம்பர் 2022  காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம்பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து மனித மனங்களினதும் இலங்கை நிலத்தினதும் சிக்கலான தருணங்களை எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திருபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன. இத்தொகுப்பில் மெய்யெழுத்து, கருங்குயில், ஆறாங்குழி, வர்ணகலா, வன் வே (One Way), பல்லிராஜா ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் ஆக்காட்டி, உயிர்மை, காலம், நீலம், வல்லினம், வனம் ஆகிய இதழ்களில் பிரசுரமானவை.

ஏனைய பதிவுகள்