பிரம்மியா சண்முகராஜா. திருக்கோணமலை: இலக்சுமி பிரசுரம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, வைகாசி 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
114 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98245-4-6.
கானல் மீன் கொத்தி, பினிக்ஸ் பறவை, களவாடப்படும் ஏக்கங்கள், கிறுக்கலான கன்னிமை, உயிர் சுமந்த சொந்தம், உரிமையானவள், நிறைவேறிய வேண்டுதல், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம், கல்யாண மேடை, கையளவு இதயம், கடலளவு நேசம், மெல்லத் திறந்தது கனவு, பூமிக்கு வந்தது மேகம், காரணம் என்ன?, ஆழ்கடலின் நங்கூரம், அன்பில் வறுமை இல்லை, வேர்களை நேசிக்கும் விழுதுகள், பதின்ம மாற்றத்தைப் படிப்பியுங்கள், யாசகப் போஜனம் ஆகிய 18 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. திருக்கோணமலையைச் சேர்ந்த பிரம்மியா தனது கதைகளுக்காக எடுத்துக்கொண்டுள்ள களங்கள் வித்தியாசமானவை. உளவியல் பட்டதாரியான இவர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் சிறுகதைகளின் உரைநடையில் ஆங்காங்கே கவிதை நடையும் இணைந்து கொள்கின்றது. உளவியல் ரீதியான அணுகுமுறைகளும் கதைகளில் காணப்படுகின்றன. இலக்சுமி பிரசுரத்தினரின் நான்காவது நூல் இது.