குப்பிழான் ஐ.சண்முகன் (மூலம்), த.அஜந்தகுமார், க.பரணீதரன் (பதிப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
300 பக்கம், விலை: ரூபா 1300., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-75-7.
இந்நூலில் குப்பிழான் ஐ.சண்முகன் (01.08.1946-24.04.2023) எழுதிய விசித்திர உலகம், ஒரு றெயில் பயணம், மனிதன் தெய்வமாகின்றான், அவனுக்கென்று ஓர் உலகம், இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது, மௌனகீதம், பைத்தியங்கள், பிரிவதற்குத் தானே உறவு, தலைமன்னார் ரெயில், பால் வண்ண நிலவு, உணர்ச்சிகள், வேட்டைத் திருவிழா, தடங்கள், இணை, நான் தேசத்துரோகி அல்ல, அழகியின் துயரங்கள், அரியத்தின் அக்காவுக்கு, உலகம் பரந்து கிடக்கிறது, நான் சாகமாட்டேன், விடிவு வரும், மாற்றங்கள், பாதையின் கதை, எல்லைகள், வலி, இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும், சிறை, உடைவுகள், நிகழ்வுகள், கனவு, ஒரு ஒட்டாத உறவாய், பரவம் தவறிய மழையைப் போலவே, தரு, சிதம்பரம், ஹீரோ. மழை தூறிய ஒரு மாலைப் பொழுது, கண்டறிதல், வாழ்க்கை என்பது, என்ரை, எங்கள் வீடு அல்லது இடைப் பிறவரல், ஒரு தோட்டத்தின் கதை, ஒரு திவச நாள், உயிரின் நடனம், ஒரு கதை ஒரு கவிதை அல்லது ஒரு கவிதைக் கதை, சொற்களுக்குப் பெறுமதி இல்லை, மோனலிசாவின் புன்னகை, நோக்கரிய நோட்டம் ஆகிய 46 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1966ஆம் ஆண்டு ராதா என்ற பத்திரிகையில் ‘பசி” என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் கால் பதித்தவர் குப்பிழான் ஐ.சண்முகன். தனது 54 ஆண்டு காலச் சிறுகதைப் பயணத்தில் 47 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். அவரது முதலாவது சிறுகதை இன்று எம் கைக்கெட்டவில்லை. இத்தொகுதியில் இதுவரை பிரசுரமாகாத இவரது இரு கதைகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 350ஆவது நூலாக வெளிவந்துள்ளது.