ஆர்.பிலோமினா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2023. (சென்னை 600 094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
xvi, 74 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 18×12.5 சமீ.
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆர்.பிலோமினா. தனது 16 வயதிலிருந்தே பத்திரிகை, வானொலி ஊடகங்களில் தனது ஆக்கங்களை பிரசுரித்து வந்துள்ளார். தனது முதல் சிறுகதைத் தொகுதியை 2010இல் ‘இமிட்டேஷன் தோடு’ என்ற பெயரில் புரவலர் புத்தகப் பூங்கா அமைப்பினூடாக வெளியிட்ட வேளை இவருக்கு வயது 58. பன்னிரு ஆண்டு இடைவெளியின் பின்னர் தனது 70 ஆவது வயதில் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியுடன் ஆக்க இலக்கிய உலகில் மீண்டும் தடம் பதித்துள்ளார். இத்தொகுதியில் சென்றிப் பொயின்ட், கிறிஸ்மஸ் தாத்தா, உறவும் பிரிவும், காவோலையும் குருத்தோலையும், சம்பளம் வாங்காத வேலைக்காரர்கள், அடிமைகள் அல்ல, கைரேகை, நாய்கள் ஜாக்கிரதை (குட்டிக்கதை), வேண்டாம் இனி வேலைக்காரி (குறுங்கதை) ஆகிய ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன.