கனடா தமிழ் எழுத்தாளர் இணையம். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, 2020. (சென்னை: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).
xii, 13-160 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-944044-3-9.
இந்நூலில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் 2019இல் நடத்திய சர்வதேச தமிழ் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற பதினாறு கதைகள் இடம்பெற்றுள்ளன. தாள் திறவாய் (எஸ்.நந்தகுமார், சென்னை), மலர் (டலின் இராசசிங்கம், யாழ்ப்பாணம்), உறவின் தேடல் (விமலாதேவி பரமநாதன், இங்கிலாந்து), ஒரு முழு நாவல் (ஸ்ரீராம் விக்னேஷ், வீரவ நல்லூர் தமிழ்நாடு), நான் யார்? (தேவகி கருணாகரன், அவுஸ்திரேலியா), கமழி (கோவிந்தராயு அருண்பாண்டியன், அண்ணா நகர்), இடுக்கண் களைவதாம் (சுமதி பாலையா, பாண்டிச்சேரி), காணாமலே (ஹரண்யா பிரசாந்தன், மட்டக்களப்பு), கனடாவில் அம்மா (இராமேஸ்வரன் சோமசுந்தரம், கனடா), நிர்ப்பந்தம் (இதயராஜா சின்னத்தம்பி, தெகிவளை), போ வெளியே (அருண்சந்தர், பாஹ்ரெய்ன்), சுயகௌரவம் (சுசீலா ராஜ்குமாரன், திருக்கோணமலை), களவும் கற்று மற (பரமேஸ்வரி இளங்கோ, வத்தளை), தீக்குருவி (மூதூர் மொஹமட் ராபி, திருக்கோணமலை), மெல்லத் திறந்தது கதவு (ஜெயபால் நவமணி இராசையா, அண்ணாநகர்), ஐந்தறிவு விதவை (அண்ணாதுரை பாலு, விருதுநகர்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.