முல்லை பொன்.புத்திசிகாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
124 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-97-0.
முல்லை பொன்.புத்திசிகாமணி எழுதிய பன்னிரு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. இதில் வெளிவராத செய்தி, தேரோடும் வீதி, பரவசங்கள், சின்னாச்சி மாமி, ஈர்ப்பு, பூமணி மாமி, சங்கு அக்கா, துணை இழத்தல், தாய்மை ஒரு வரம், வேட்டையும் வேடிக்கையும், அம்மா உன்னை நினைத்து, பிணவாடை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரண்டு கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னதாக 2000ஆம் ஆண்டில் ‘சொர்ணம்மா’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்ட பொன்னையா புத்திசிகாமணி வன்னி மண்ணில் வட்டுவாகல் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நீண்ட காலங்களாக ஜேர்மனியில் வசித்து வருபவர். எண்பதுகளில் இவர் இலங்கையில் வாழ்ந்த வேளையில் முல்லைத்தீவு வீரகேசரி பத்திரிகை நிருபராகப் பணியாற்றியவர். முல்லை மறுமலர்ச்சிக் கழகத்தில் நீண்ட காலம் செயலாளராகக் கடமையாற்றியவர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 276ஆவது நூலாக வெளிவந்துள்ளது.