17670 சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு.

தாமரைச் செல்வி. தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19576-12-8.

ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் வழங்கிய படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலிக்கும் அற்புத சாட்சிகளாய் அமைந்தவையே. இவர் தன் வாழ்க்கையோடு இணைந்த மனிதர்களை, அவர்கள் சுமந்த பாடுகளை எழுத்திலமைந்த ஆவணமாக மாற்றியிருக்கிறார். அதனால்தான் இவர் வாசகரைக் கூட்டிச் செல்லும் வெளிகளில் சலிப்பின்றி எம்மால் அவர் கூடப் பயணிக்க முடிகிறது. பயணத்தின் முடிவில் துளிக் கண்ணீர் சிந்தும் விழிகளோடு அவரிடமிருந்து விடை பெறவும் முடிகிறது. அக்கண்ணீர் தானே அவரது எழுத்துக்களின் வெற்றிக்கான அத்தாட்சி. இந்நூலிலும் தாமரைச் செல்வியின் 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. யாரொடு நோவோம், கனவுகளின் மீள்வருகை, கசிந்துருகி கண்ணீர் மல்கி, மௌன யுத்தம், எதிர்பார்ப்பு, வெயிலோடும் மழையோடும், மழை வரும் காலம், அவனும் அவளும், இருட்டின் நிறம் வெள்ளை, பறவைகளின் நண்பன், சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு, இனிவரும் நாட்கள், வாழ்தல் என்பது, தேவதைகளின் உலகம், நிழல் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்