17671 சீர்மியம்: சிறுகதைத் தொகுதி.

ஆ.ஜென்சன் றொனால்ட் (புனைபெயர்: கவிஞர் சூரியநிலா). யாழ்ப்பாணம்: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வத பதிப்பு, பெப்ரவரி 2025. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).

vi, 98 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98956-6-9.

‘சீர்மியம்’ 15 சிறுகதைகளைக் கொண்ட தொகுதியாக வெளிவந்துள்ளது. இக்கதைகள் சிறுவர்களையும் இளைய சமுதாயத்தையும் அறிவுபூர்வமானதும் யதார்த்தமானதுமான சிந்தனைகளினூடாக கையாள்வதற்கு  பெற்றோருக்கும் சமூகத்துக்குமான துணுக்குகளை எத்தனமாக்கி சிறுவிசையின் பெரு விளையுள்களைப் பிறப்பிக்க முயன்று நிற்கின்றது. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பிரதான கருவைத் தாங்கி எளிய மொழி நடையிலும் ஊர்ப்பேச்சு வழக்கிலும் பின்னப்பட்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் பொதிந்துள்ள சிறு பொறிகள் அறியாமையைப் பொசுக்கவும், இதில் உந்தப்பெறும் சிறு விசைகள் பெரிய சுமைகளை இலகுவாகப் புரட்டவும் உதவுபவை. துடக்கு, எல்லோரும் வெற்றி பெறலாம், நாடக மேடை, கணத்தில் வாழ்வோம், ஆளுமை, வாழ்க்கைத் திறன்கள், மரியாதை, கத்தரிப்பூவும் மைனாவும், சந்தைக்குப் போவோம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை,  இடைவெளி, மனமாற்றம், பருவத்தே பயிர் செய், ஜீவகாருண்யம், புரிந்துணர்வு ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்