ஆசி கந்தராஜா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
112 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-60-3.
வைரஸ் புராணம், கவ்வாத்து, அஜினமோட்டோ, பலஸ்தீனியன் வீட்டுப் பூனைகள், சயந்தனின் ஐமிச்சங்கள், மரணத்தின் குடி, காய்களைக் கனியவைக்க, கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும், பூக்களே காதல் செய்யுங்கள், சீன நாட்டு நண்பர், வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு, வெடுக்குப் பத்தன், உடையார் வளவு, மரபணு வினா-விடை, சிலீப் அப்னியா, சைவமுட்டை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினாறு அறிவியல் புனைகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கருப்பொருளையும் வெவ்வேறு கதாபாத்திரங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. கதாசிரியரின் பட்டறிவு, கதையை நகர்த்த உரையாடலைப் பயன்படுத்தும் விதம், கதையிலுள்ள அறிவியலை விவரிக்கும் எளிமையான எழுத்து நடை போன்றவை இந்நூலின் சிறப்பம்சங்களாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 333ஆவது நூலாக வெளிவந்துள்ளது.