தமிழ்நதி. சென்னை 600051: தமிழினி வெளியீடு, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 142, ஜானி ஜான் கான் ரோடு).
128 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-87645-00-9.
இத்தொகுப்பில் அப்பாவின் புகைப்படம், முதியோர் கிராமம், எனது தலைக்குள் ஒரு பறவை வாழ்கிறது, தங்க மயில்வாகனம், உயிர்க்காற்று, நிலக்கீழறைவாசி, துருவங்கள், அப்படியே எழுதப்பட்ட கனவு, துக்கம், வேகம் ஆகிய பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் வாழ்ந்து வருகிறார். இதுவரை நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள்), இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்) கானல் வரி (குறுநாவல்) ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்) பார்த்தீனியம் (நாவல்) ஆகிய நூல்களை எழுதி ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு வழங்கியுள்ளார்.